ADDED : ஜூலை 03, 2024 03:01 AM
தாராபுரம்:மத்திய
அரசு புதியதாக அமல்படுத்தியுள்ள குற்றவியல் சட்டங்களை திரும்பப்
பெறக்கோரி, நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், தாராபுரம் வக்கீல்
சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர்
கலைச்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில், மூன்று புதிய சட்டங்களையும், மத்திய அரசு திரும்பப் பெற
வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மூத்த வக்கீல்கள் ராமசாமி, ரமணி, தென்னரசு
உள்பட, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.