/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மொழி பிரச்னையால் விசாரணையில் சிக்கல் மொழி பிரச்னையால் விசாரணையில் சிக்கல்
மொழி பிரச்னையால் விசாரணையில் சிக்கல்
மொழி பிரச்னையால் விசாரணையில் சிக்கல்
மொழி பிரச்னையால் விசாரணையில் சிக்கல்
ADDED : ஜூன் 21, 2025 12:39 AM
பல்லடம் : நேற்று முன்தினம், பல்லடம் அடுத்த, குன் னாங்கல்பாளையம் கிராமத்தில், சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர், 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொள்ளும்போது, தமிழில் பேசியது அவர்களுக்கு புரியவில்லை. அதேபோல், கைதானவர்கள் பேசியது போலீசாருக்கு புரியவில்லை. அவர்கள் வைத்திருந்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் இருந்தன.
இதனால், போலீசாருக்கு, பேசுவது மட்டுமின்றி, அவர்களின் ஆவணங்களை சரி பார்ப்பதிலும் சிக்கல் எழுந்தது. இது, விசாரணையிலும் தொய்வை ஏற்படுத்தியது.
திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். இதுபோன்ற வழக்கு விசாரணைகளின் போது, போலீசார் ஒவ்வொரு முறையும் மொழி பிரச்னையால் சிக்கலை சந்திக்கின்றனர்.