ADDED : ஜூன் 09, 2025 12:25 AM

பொங்கலுார்; பொங்கலுார், தில்லை நகரில் சிவ விஷ்ணு, செல்வவிநாயகர், காசி விசுவநாதர் உடனமர் விசாலாட்சி அம்மன், சுப்ரமணியர் உடனமர் வள்ளி தெய்வானைகோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முளைப்பாலிகை, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, மூன்று கால யாக வேள்வி ஆகியனநடந்தன.
நேற்று காலை நான்காம் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து விமானகலசம் மற்றும் மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.