/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செல்லாண்டியம்மன் கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம் செல்லாண்டியம்மன் கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம்
செல்லாண்டியம்மன் கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம்
செல்லாண்டியம்மன் கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம்
செல்லாண்டியம்மன் கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 29, 2025 11:18 PM
உடுமலை; சின்னபாப்பனுாத்து விநாயகர் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில், கும்பாபிேஷகம் ஜூலை 7ல் நடக்கிறது.
உடுமலை அருகே சின்னபாப்பனுாத்து பகுதியில், வரசித்தி விநாயகர் மற்றும் செல்லாண்டியம்மன், முத்தாலம்மன், சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிேஷக விழா ஜூலை 5ம்தேதி துவங்குகிறது. அன்று, கோ பூஜை, நவக்கிரக சாந்தி ேஹாமம் நடக்கிறது. மறுநாள் இரண்டாம் கால யாகவேள்வி, மூன்றாம் கால யாக வேள்விகளும் நடக்கிறது.
ஜூலை 7ம் தேதி அதிகாலையில் நான்காம் கால யாகவேள்வி, காலை, 5:30 மணிக்கு விநாயகர் சுவாமிக்கும், முத்தாலம்மனுக்கும், காலை, 9:00 மணிக்கு ஸ்ரீ சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும், காலை 9:45 மணிக்கு செல்லயாண்டியம்மனுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது.