/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு
கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு
கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு
கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 01, 2025 12:19 AM

திருப்பூர்; பெருந்துறையில் உள்ள தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் சார்பில் 2025-28 மூன்றாண்டு காலத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக பி.சி.பழனிசாமி, செயலாளராக ஆர்.ஆர்.சத்தியமூர்த்தி, பொருளாளராக ஈ.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களான, கொங்கு பொறியியல் கல்லுாரி மற்றும் கொங்கு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ஸர் கல்லுாரியின் தாளாளராக கிருஷ்ணன், கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிலையம், கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக்கல்லுாரியின் தாளாளராக கே.கார்த்திகேயன், கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின் தாளாளராக சச்சிதானந்தன், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக டாக்டர் செங்கோட்டு வேலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டாக்டர் மாணிக்கம், வெங்கடாசலம், மாலிதி இளங்கோ, ஏ.கே.இளங்கோ, டாக்டர் குமாரசாமி உபதலைவர்களாகவும், தங்கவேல், பாலகிருஷ்ணன் இணைச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
இத்தகவலை அறக்கட்டளை தேர்தல் அதிகாரி டாக்டர் குமாரசுவாமி தெரிவித்தார். புதிய நிர்வாகிகளுக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள், நிறுவனங்கள் முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.