/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சமையலறை கட்டடம் பள்ளிகளில் திறப்பு சமையலறை கட்டடம் பள்ளிகளில் திறப்பு
சமையலறை கட்டடம் பள்ளிகளில் திறப்பு
சமையலறை கட்டடம் பள்ளிகளில் திறப்பு
சமையலறை கட்டடம் பள்ளிகளில் திறப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:39 AM
திருப்பூர்; குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி களில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 14.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த திட்ட பணிகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார்.
அமைச்சர் சாமிநாதன், 14.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவடைந்த திட்ட பணிகளை திறந்துவைத்தார்; கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 99.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளை துவக்கிவைத்தார்.
குண்டடம் ஒன்றியம், செங்கோடம்பாளையம் ஊராட்சி, ஊதியூர் சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 7.43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமையலறை கட்டடம்; தாயம்பாளையம் ஆரம்ப பள்ளியில், 7.43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.