ADDED : ஜூன் 16, 2025 11:56 PM
திருப்பூர்;அமெச்சூர் பவர்லிப்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான பளு துாக்கும் போட்டி, கோவையில் நடந்தது.
இதில், பதின்ம வயதினர் பிரிவில் திருப்பூர் கிட்ஸ் கிளப் மாணவர் சித்தேஷ், 50 கிலோ எடை துாக்கி முதலிடம் பெற்றார். மாணவரை, பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.