/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கபடி அணி தேர்வு; திறன் காட்டிய மாணவியர்கபடி அணி தேர்வு; திறன் காட்டிய மாணவியர்
கபடி அணி தேர்வு; திறன் காட்டிய மாணவியர்
கபடி அணி தேர்வு; திறன் காட்டிய மாணவியர்
கபடி அணி தேர்வு; திறன் காட்டிய மாணவியர்
ADDED : பிப் 24, 2024 11:00 PM

திருப்பூர்:கரூரில் இன்று நடைபெற உள்ள மாநில சப்-ஜூனியர் கபடி அணித்தேர்வில் பங்கேற்க உள்ள, திருப்பூர் மாவட்ட கபடி அணி தேர்வு நேற்று நடந்தது.
இன்று கரூர், சேரன் உடற்கல்வியியல் கல்லுாரியில், 14 வயதுக்கு உட்பட்ட, மாநில சப்-ஜூனியர் கபடி அணித்தேர்வு நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, மாவட்ட அமெச்சூர் கபடி கழக மைதானத்தில் நேற்று நடந்தது; மாவட்டம் முழுதும் இருந்து, 60 சிறுமியர் பங்கேற்றனர்.
மாவட்ட அமெச்சூர் கபடி கழக சேர்மன் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர், மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தேர்வு போட்டியை துவக்கி வைத்தார். மாநில தேர்வு போட்டிக்கு, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட கபடி கழக துணைத்தலைவர் ராமதாஸ், பொருளாளர் ஆறுச்சாமி, பி.ஆர்.ஓ., சிவபாலன், இணைச்செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தேவராஜன், கவுரவ உறுப்பினர் கொங்கு நாச்சிமுத்து, தேர்வுக்குழுத் தலைவர் ருத்ரன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் செந்தில், யாழினி, சர்வதேச நடுவர் முத்துச்சாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர், நடுவர்கள் பாபு, சிவஇளங்கோ, சந்திரபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநில போட்டியில் தேர்வாகும் சிறுமியர், மார்ச், 31 முதல், ஏப்., 3ம் தேதி வரை பீகாரில் நடக்கும் தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர்.