திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இதில், வாலிபால், கபடி, தடகளம் என பல்வேறு போட்டிகள் இடம்பெற்று இருந்தன.
இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்ட காரணத்தால், மக்கள் எளிதாக போலீசார் மீதான அச்சம் விலகி, அவர்களை எளிதாக அணுகி தங்கள் பகுதி குற்றங்கள் குறித்து தெரியப்படுத்த வழிவகை செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் தொடர்ந்து பல்வேறு பணி சுமைகளுக்கு நடுவில், நல்லுறவு விளையாட்டு போட்டி மூலம் புத்துணர்ச்சி பெற முடிகிறது.
போலீசார், பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், மீண்டும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.