/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும்' நீதிபதி விளக்கம் 'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும்' நீதிபதி விளக்கம்
'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும்' நீதிபதி விளக்கம்
'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும்' நீதிபதி விளக்கம்
'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும்' நீதிபதி விளக்கம்
ADDED : ஜூன் 20, 2025 02:34 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மூத்தோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அவிநாசி, மங்கலம் ரோடு, காசிவுண்டன்புதுாரில் உள்ள மூத்தோர் நல இல்லத்தில் இம்முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி தலைமை வகித்தார். முன்னதாக விழுதுகள் அமைப்பின் திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். வக்கீல்கள் முத்துலட்சுமி, பழநிசெல்வம் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
நீதிபதி மோகனவள்ளி பேசியதாவது:
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முன்னர் கசக்கும்; பின்னர் இனிக்கும் என்று சொல்வர். இதற்கு வயதான பெரியவர்கள் நமக்கு ஏதாவது ஒரு அறிவுரை சொன்னால் நமக்கு ஏற்பது கடினமாக, புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். அதே விஷயம் பின்னர் நாம் ஒரு சூழலுக்கு ஆளாகும் போது அந்த அறிவுரை தான் பயன்படும்; பயனுள்ளதாக மாறும். இந்த பழமொழியை மறந்து போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம்.
தாத்தா - பாட்டிகளிடம் கதைகள் கேட்டு, அன்பும், அரவணைப்பும் நல்ல அறிவுரைகளையும் கேட்டு வளர வேண்டிய நாம், இன்று பயனில்லாத சமூக வலை தளங்களில் நம் நேரத்தை இழந்து, நல்லது கெட்டது தெரியாமல் தவிக்கிறோம். இரு வாரிசுகளை பெற்ற பெரியவர்கள் மாதம் ஒருவர் வீடு என்று வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வாரிசுகள் பெற்ற குழந்தைகள் அதே போல் எண்ணினால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை உணர வேண்டும்.
சொத்துக்களை பறித்துக் கொண்டு பெற்றோர்களை விரட்டி விடுவோருக்கு கடும் தண்டனை வழங்கியும், சொத்துகளை பெற்று, பெற்றோர்களுக்கே திரும்ப வழங்கும் சட்டங்களும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.