/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தெற்கிலிருந்து வடக்கில் சேருங்க: 3 கிராம மக்கள் மனு தெற்கிலிருந்து வடக்கில் சேருங்க: 3 கிராம மக்கள் மனு
தெற்கிலிருந்து வடக்கில் சேருங்க: 3 கிராம மக்கள் மனு
தெற்கிலிருந்து வடக்கில் சேருங்க: 3 கிராம மக்கள் மனு
தெற்கிலிருந்து வடக்கில் சேருங்க: 3 கிராம மக்கள் மனு
ADDED : மே 20, 2025 11:27 PM
திருப்பூர், ; திருப்பூர் தெற்கு தாலுகாவிலுள்ள மூன்று கிராமங்களை பிரித்து, வடக்கு தாலுகாவோடு இணைக்க வலியுறுத்தி ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், செவந்தாம்பாளையத்திலுள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் தெற்கு தாலுகா, 16 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கி செயல்படுகிறது. இவற்றில், ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் கிராமங்கள், தாலுகா அலுவலகத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு, மூன்று பஸ்ஸில் பயணித்து தான் தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது. எனவே, ஏழு வருவாய் கிராமங்களை மட்டுமே கொண்டுள்ள திருப்பூர் வடக்கு தாலுகாவோடு, ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய மூன்று கிராமங்களையும் இணைக்க வேண்டும்.
திருப்பூர் தெற்கு தாலுகாவில், ஒரே ஒரு ஆதார் மையம் மட்டுமே உள்ளது. இம்மையத்துக்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால், 40 பேருக்கு மட்டுமே ஆதார் சேவை அளிக்கப்படுகிறது. புதிய ஆதார் பதிவு, ஆதார் திருத்தங்களுக்காக வரும் மக்கள், மிகவும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, கூடுதல் ஆதார் மையம் அமைக்கவேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இடுவாயை சேர்ந்த ராமசாமி, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்ல போதிய பஸ் வசதி ஏற்படுத்தித்தர மனு அளித்தார்.