/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் ஸ்டாண்டிலேயே பரிதாபம் பஸ்களின் டயர் 'பதம் பார்ப்பு' பஸ் ஸ்டாண்டிலேயே பரிதாபம் பஸ்களின் டயர் 'பதம் பார்ப்பு'
பஸ் ஸ்டாண்டிலேயே பரிதாபம் பஸ்களின் டயர் 'பதம் பார்ப்பு'
பஸ் ஸ்டாண்டிலேயே பரிதாபம் பஸ்களின் டயர் 'பதம் பார்ப்பு'
பஸ் ஸ்டாண்டிலேயே பரிதாபம் பஸ்களின் டயர் 'பதம் பார்ப்பு'
ADDED : ஜூன் 14, 2025 11:18 PM

திருப்பூர்:திருப்பூர் - பெருமாநல்லுார் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு, தரைத்தளம் பணி மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்தது.
பஸ்கள் உள்நுழையும், வெளியேறுமிடத்தில் பஸ்களின் வேகத்தை குறைக்க பிளாஸ்டிக் வேகத்தடைகள் நிறுவப்பட்டன. இவை தொடர்ந்து பராமரிக்காமல் விடப்பட்டதால், ஆங்காங்கே பெயர்ந்து வர துவங்கியுள்ளது.
பஸ்கள் வெளியே வரும், வடக்கு வாசல் நுழைவு வாயிலில், பெரும்பகுதி வேகத்தடை பெயர்ந்து, அவற்றை நிறுவ பயன்படுத்திய ஆணி, வெளியே தெரிகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஆணிகள் மேலெழுந்து இருப்பதால், பஸ் டயர்கள் பஞ்சராகின்றன.
வளைவில் திரும்பும் இடம் என்பதால், வேகத்தடை சேதமாகி, பஸ்கள் வேகம் குறையாமல் விருட்டென கடந்து செல்கின்றன. எனவே, டயர்கள் சேதமாகி, பஞ்சராவதை தடுக்க, ஆணிகளை அகற்ற வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் முன், சாய்வு தளம் போன்ற புதிய வேகத்தடை அமைக்க வேண்டும். பஸ்களை பாதுகாப்பான வேகத்தில் இயக்க டிரைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.