ADDED : ஜூன் 21, 2025 12:35 AM
உடுமலை : உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அபெக்ஸ் சங்கம் சார்பில், 50 மாணவியருக்கு 250 நோட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் விஜயா, ஆசிரியர் விஜயலட்சுமி, அபெக்ஸ் சங்க தலைவர் சந்திரன், செயலாளர் சீதாராமன் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவியருக்கு எழுது பொருட்களும் வழங்கப்பட்டன.