ADDED : ஜன 04, 2024 12:41 AM
திருப்பூர் : வரும், 7ம் தேதி, மாநில தடகள சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட தடகள போட்டி, உடுமலை, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கவுள்ளது.
ஆறு முதல் 20 வயது வரை, மூத்தோர் தனிப்பிரிவு வரை வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம். 30மீ., துவங்கி, 400மீ., வரை விரைவு ஓட்ட போட்டி நடக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு, 86677 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.