ADDED : ஜூன் 29, 2025 12:40 AM

திருப்பூர் : திருப்பூர் பெம் பள்ளியில் நடந்த பள்ளி முதலீட்டு விழாவில், புதிய மாணவர் தலைவர்களுக்கு பொறுப்புகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், நல்லுார் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், பள்ளி இணைச்செயலாளர் சரண்யா விஷ்ணு பழனிசாமி, மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன், முதல்வர் விஜய் கார்த்திக் பங்கேற்றனர்.
பதவிப்பிரமாணம் மேற்கொண்ட மாணவர் தலைவர்கள், தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தனர்.