/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மிளகாயை மதிப்புக்கூட்டி விற்க ஆர்வம் விலை வீழ்ச்சியால் மனமாற்றம் மிளகாயை மதிப்புக்கூட்டி விற்க ஆர்வம் விலை வீழ்ச்சியால் மனமாற்றம்
மிளகாயை மதிப்புக்கூட்டி விற்க ஆர்வம் விலை வீழ்ச்சியால் மனமாற்றம்
மிளகாயை மதிப்புக்கூட்டி விற்க ஆர்வம் விலை வீழ்ச்சியால் மனமாற்றம்
மிளகாயை மதிப்புக்கூட்டி விற்க ஆர்வம் விலை வீழ்ச்சியால் மனமாற்றம்
ADDED : மே 15, 2025 11:30 PM

உடுமலை, ; பச்சை மிளகாய் விலை வீழ்ச்சியின் போது, வற்றலாக மதிப்பு கூட்டி உடுமலை பகுதி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இப்பணிக்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது.
உடுமலை பாப்பனுாத்து, ஆண்டியகவுண்டனுார், மலையாண்டிபட்டணம், கண்ணமநாயக்கனுார், குட்டியகவுண்டனுார் உள்ளிட்ட பல கிராமங்களில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது.
ஆண்டு முழுவதும், சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றி, காய்கறி சாகுபடியில், ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பச்சை மிளகாயை குறிப்பிட்ட இடைவெளியில் சாகுபடி செய்து, உடுமலை மற்றும் இதர சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
வழக்கமாக பருவமழை சீசனுக்குப்பின், பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து காய்கறி சாகுபடி பரப்பும் அதிகரித்து, விலை வீழ்ச்சி ஏற்படும். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடந்த சில ஆண்டுகளாக மிளகாயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
மிளகாய் சாகுபடியில், ெஹக்ேடருக்கு, 13 மெட்ரிக் டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. கோடைக்கால சாகுபடியில் மகசூல் அதிகரித்து, சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால், மிளகாய்களை செடியிலேயே பழுக்க விட்டு அறுவடை செய்கின்றனர். இதில், விதைத்தேவைக்கு போக மீதமுள்ள மிளகாயை காய வைத்து வற்றல் மிளகாயாக மதிப்பு கூட்டுகின்றனர்.
செடியிலேயே மிளகாயை காய விடுவதால், அவற்றின் எடை வெகுவாக குறைந்து, ெஹக்டேருக்கு, 3 மெட்ரிக் டன் வற்றல் மிளகாய் (வரமிளகாய்) கிடைக்கிறது. பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால், உடுமலை பகுதி விவசாயிகள் கிராம உலர்களங்களில், வற்றலை காய வைத்து தரம் பிரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களிலும், மிளகாயை காய வைக்க அதிகளவு கொண்டு வருகின்றனர். நடப்பு சீசனில், உலர்களங்களுக்கு மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.