/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னந்தோப்பில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம் தென்னந்தோப்பில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம்
தென்னந்தோப்பில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம்
தென்னந்தோப்பில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம்
தென்னந்தோப்பில் ஊடுபயிர் விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 24, 2025 11:33 PM

உடுமலை: தேங்காய் மகசூல் இழப்பை சரிக்கட்ட தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை அருகே தளி சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வேர் வாடல் நோய் உள்ளிட்ட காரணங்களால், தேங்காய் மகசூல் வெகுவாக குறைந்து விட்டது. வருவாய் இழப்பை சந்தித்த விவசாயிகள் தற்போது தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீர் வளமுள்ள பகுதிகளில், ஊடுபயிராக பாக்கு, கோகோ சாகுபடி செய்கின்றனர். ஊடுபயிரால், கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஊடுபயிர்களில் இருந்து விழும் இலைகளை அப்படியே விட்டு விடுவதால், அவை மட்கி, உரமாகவும் பயன்படுகிறது.