/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டுமான பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை டூ கூட்டுறவுத்துறை அதிகாரிகள் 'மவுனம்'கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டுமான பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை டூ கூட்டுறவுத்துறை அதிகாரிகள் 'மவுனம்'
கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டுமான பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை டூ கூட்டுறவுத்துறை அதிகாரிகள் 'மவுனம்'
கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டுமான பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை டூ கூட்டுறவுத்துறை அதிகாரிகள் 'மவுனம்'
கூட்டுறவு சங்க வளாகத்தில் கட்டுமான பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை டூ கூட்டுறவுத்துறை அதிகாரிகள் 'மவுனம்'
ADDED : ஜன 28, 2024 12:13 AM
திருப்பூர்;திருப்பூர் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் நடந்து வரும் அனுமதியற்ற கட்டுமானப் பணி குறித்த புகார்களின் பேரில் அரசு துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் பி.என்., ரோட்டில், கூட்டுறவு துறைக்குச் சொந்தமான வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சில மாதங்களாக வேளாண் உற்பத்தியாளர்கள்தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சந்தை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், அங்கு சில தனி நபர்கள் எந்த விதமான அனுமதியுமின்றி கடைகள் கட்டும் பணியை மேற்கொண்டனர். அங்கு விதிகளுக்குப் புறம்பாக பூக்கடைகள் அமைக்கப்படுவதாக பல தரப்பிலும் புகார் எழுந்தது.
இந்த பணி குறித்து, மாநகராட்சி பூ மார்க்கெட் குத்தகைதாரர் தரப்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இது குறித்து அரசு தலைமை செயலர் உள்ளிட்ட தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இங்கு நடந்து வந்த கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டது. இதனால், ஒரு நாள் நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணி மீண்டும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி அரசு விடுமுறை நாளிலும் அங்கு கட்டுமான தொழிலாளர்கள் பணி செய்தனர்.
இது குறித்து தொ.மு.ச., (மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்) சார்பில், தமிழக முதல்வர் முதல் பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.
புகார்களின் பேரில், திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் நேற்று மாலை அங்கு ஆய்வு நடத்தினர். இது குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தொழிலாளர் நலத்துறையினரும் விசாரணையைத் துவங்கியுள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் அறிக்கை அளிக்கப்பட்டு உரிய துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கண்டு கொள்ளாதகூட்டுறவு துறை
கூட்டுறவு துறைக்குச் சொந்தமான வளாகத்தில் கடந்த நான்கு நாட்களாக அனுமதியற்ற முறையில், தனி நபர்கள் மூலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இது குறித்து முதல்வர் முதல் மாவட்ட நிர்வாகம் வரை ஆதாரங்களுடன் புகார் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இது வரை கூட்டுறவு துறை தரப்பில் எந்த அலுவலரும் அங்கு சென்று இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர் அரசு விடுமுறை என்ற நிலையில், அதிகாரிகள் யாரும் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆளும் கட்சியினர் ஆதரவுடன் இந்த கட்டுமானப் பணி ஜரூராக நடக்கிறது.