Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுகாதாரம் காக்க அறிவுறுத்தல்; மருத்துவமனை நிர்வாகம் 'அட்வைஸ்'

சுகாதாரம் காக்க அறிவுறுத்தல்; மருத்துவமனை நிர்வாகம் 'அட்வைஸ்'

சுகாதாரம் காக்க அறிவுறுத்தல்; மருத்துவமனை நிர்வாகம் 'அட்வைஸ்'

சுகாதாரம் காக்க அறிவுறுத்தல்; மருத்துவமனை நிர்வாகம் 'அட்வைஸ்'

ADDED : ஜூன் 09, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் வரத்துவங்கியிருப்பதால், வளாகத்தை துாய்மையாக வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை, ஆங்காங்கே நிறுவப்பட்டு வருகிறது.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 2023 மே, 28ல் திறக்கப்பட்டது. இம்மருத்துவமனை, ஐந்து தளங்களுடன், 850க்கும் அதிகமான படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.

ஆண், பெண்களுக்கென தனித்தனி பிரிவு மட்டுமின்றி, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தனி வளாகமே ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின், மருத்துவ வசதி மேம்பட்டுள்ளதால், மாவட்டம் முழுதும் இருந்தும் தினசரி, 2,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

உள்நோயாளிகளாக, 400க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். எந்த வார்டாக இருந்தாலும் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.

காலை, மாலை பார்வையாளர் நேரம் தவிர, பிற நேரங்களில் யாரும் வார்டுக்குள் பிரவேசிக்க கூடாது என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும், வளாகத்துள்ளே அமர்ந்து உணவு அருந்துவது, நோயாளியின் உடன் இருப்போர் சிலர், மது அருந்தி விட்டு வளாகத்துக்குள் வருவது, எச்சில் உமிழ்வது போன்ற சுகாதார கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க ஆண், பெண் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு பிரிவு, அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில்,'இது நமது மருத்துவமனை; இதை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை; குடிபோதையில் வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

பெண் நோயாளிகளுடன், பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும். உணவருந்த தனியிடம் கீழ்தளத்தில் உள்ளது; அதனை விடுத்து, எல்லா இடத்திலும் அமர்ந்து உணவு உண்ண கூடாது; எச்சில் துப்பாதீர்கள்,' உள்ளிட்ட அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us