/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரோட்டை ஆக்கிரமித்து தொழில்; கே.பி.என்., காலனியில் புகார் ரோட்டை ஆக்கிரமித்து தொழில்; கே.பி.என்., காலனியில் புகார்
ரோட்டை ஆக்கிரமித்து தொழில்; கே.பி.என்., காலனியில் புகார்
ரோட்டை ஆக்கிரமித்து தொழில்; கே.பி.என்., காலனியில் புகார்
ரோட்டை ஆக்கிரமித்து தொழில்; கே.பி.என்., காலனியில் புகார்
ADDED : ஜூலை 04, 2025 12:48 AM
திருப்பூர்; 'குடியிருப்பு பகுதியில் செயல்படும் பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், தொழில் செய்ய வேண்டும்' என, குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில், பனியன் தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் மற்றும் வேஸ்ட் குடோன் உள்ளிட்ட தொழிலில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும், இத்தகைய தொழிற்கூடங்கள், குடியிருப்பு பகுதியில் தான் அமைந்திருக்கிறது.
சில இடங்களில், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்தும் தொழில் கூடங்கள் செயல்படுகின்றன என்ற புகார் இருந்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.பி.என்., காலனி, 5வது குறுக்கு பிரிவு பகுதியில், குடியிருப்புகளின் இடையே செயல்படும் வேஸ்ட் குடோன் உரிமையாளர்கள், அவற்றை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கொட்டி வைத்து, தொழில் செய்கின்றனர்.
தவிர, மாநகராட்சி சாலையையும் ஆக்கிரமித்து, தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என, அங்குள்ள குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை எனவும், அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.