/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்த இந்திய தேசிய லீக் கட்சியினர் கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்த இந்திய தேசிய லீக் கட்சியினர்
கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்த இந்திய தேசிய லீக் கட்சியினர்
கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்த இந்திய தேசிய லீக் கட்சியினர்
கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்த இந்திய தேசிய லீக் கட்சியினர்
ADDED : மார் 25, 2025 06:54 AM

திருப்பூர் ; திருப்பூரில், பெரிய கடை வீதி, நொய்யல் வீதி பகுதிகளில், ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென, இந்திய தேசிய லீக் கட்சியினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இது குறித்து, 17ம் தேதி அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்திய தேசிய லீக் திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லம் தலைமையில் அக்கட்சியினர், கையில் ரோஜா பூக்களுடன், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
இது குறித்து, அஸ்லம் கூறியதாவது:
திருப்பூரில் பெரிய கடை வீதி, நொய்யல் வீதி பகுதி பிரியாணி கடை வைத்திருப்போர், ரோட்டோர பகுதிகளை ஆக்கிரமித்து, ஷெட் அமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நொய்யல் வீதியில் இறைச்சி கடை நடத்துவோர், சுகாதாரமற்ற வகையில் இறைச்சி விற்கின்றனர்.
ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், சுகாதாரமின்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கடந்த, 17ம் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளித்தோம்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை மென்மையாக கண்டிக்கும் வகையில், கலெக்டருக்கு ரோஜா பூ அளிக்க வந்துள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அதன்பின், குறைகேட்பு கூட்ட அரங்கிற்குள் சென்றவர்கள், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ரோஜா பூவை கொடுத்து, கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ஒரே ஒரு பூவை வாங்கிக்கொண்ட கலெக்டர், 'ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக,' உறுதி அளித்தார்.