/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரிப்புவட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரிப்பு
வட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரிப்பு
வட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரிப்பு
வட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரிப்பு
ADDED : ஜன 30, 2024 11:42 PM
உடுமலை;வட மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரித்து, உடுமலையில் இருந்து அதிகப்படியான லாரிகளில் எடுத்துச்செல்லப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை விவசாயம், பிரதான தொழிலாக உள்ளது. இங்கிருந்து, தேங்காய் மட்டுமின்றி இளநீரும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.
இந்த இளநீரை அனைத்து தரப்பினரும் விரும்பி பருகுகின்றனர். இது மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.
தற்போது, வட மாநிலங்களில், இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்குள்ளோர் இதை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அம்மாநிலங்களில் இளநீர் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து லாரிகள் வாயிலாக, இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி, தோப்புகளில் இருந்து, ஒரு இளநீர், 21 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக, அக்., முதல் ஜன., வரை இளநீர் வரத்து அதிகமாக இருக்கும். அவ்வகையில், தற்போது, வட மாநிலங்களுக்கு, லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகளில் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தேவை அதிகமாக இருந்தும், வரத்து குறைவால், கூடுதலாக இளநீரை அனுப்ப முடியாத சூழலும் ஏற்படுகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.