ADDED : ஜன 01, 2024 12:24 AM
திருப்பூர்:நேற்று காலை முதலே மீன் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்தது. வழக்கமாக, காலை, 7:00 மணிக்கு பின் மார்க்கெட் சுறுசுறுப்பாகும்.
நேற்று, காலை, 6:00 மணி முதலே வாடிக்கையாளர் பலர் வர துவங்கினர். புயல், வெள்ள பாதிப்பு ஓய்ந்து, கடலோர மாவட்டங்களில் இயல்பு திரும்பியுள்ளதால், மீன் வரத்து ஒரு மாதத்துக்கு பின், 60 டன்னை எட்டியது. அசைவ பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.
மீன் வியாபாரிகள் கூறுகையில், 'தொடர் விடுமுறை என்பதால், தற்போது மீன் விற்பனை அதிகமாகியுள்ளது. தவிர, வரத்து இயல்புக்கு திரும்பியுள்ளதால், விலை உயர்வில்லை. ஆகையால், பலரும் மீன் வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் வரை இதே நிலை தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.