Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'வனத்துக்குள் திருப்பூர்' உருவாக்கிய மாநகராட்சி மூங்கில் பூங்கா திறப்பு

'வனத்துக்குள் திருப்பூர்' உருவாக்கிய மாநகராட்சி மூங்கில் பூங்கா திறப்பு

'வனத்துக்குள் திருப்பூர்' உருவாக்கிய மாநகராட்சி மூங்கில் பூங்கா திறப்பு

'வனத்துக்குள் திருப்பூர்' உருவாக்கிய மாநகராட்சி மூங்கில் பூங்கா திறப்பு

ADDED : ஜன 06, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர், சின்னக்காளிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மாநகராட்சி மூங்கில் பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம், திருப்பூர் மாநகராட்சி, 'வெற்றி' அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் ஆகியன சார்பில், இடுவாய் - சின்னக்காளிபாளையத்தில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட்டது.

மாநகராட்சிக்கு சொந்தமான, 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பூங்காவில், 50 வகையான மூங்கில் நாற்று தேர்வு செய்து, நட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, 'மியாவாகி' என்ற அடர்வனம், குழந்தைகள் விளையாட சிறுவர்பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை பண்ணை, திடக்கழிவு மேலாண்மை மாதிரி கட்டமைப்பு, கழிவுநீர் மேலாண்மை கட்டமைப்பு, நெகிழி இல்லா திருப்பூர் மாதிரி கட்டமைப்பு ஆகியன இடம் பெற்றுள்ளது.

'கிளாசிக் போலோ' நிறுவனம் சார்பில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூங்கில் பூங்காவும், சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயிலரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இயற்கை அழகு பொங்கும் சூழலில் அமைந்துள்ள, மூங்கில் பூங்காவை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம், வனத்துக்குள் திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் அனிதா சந்திரசேகர் உள்ளிட்டோர் பூங்காவை சுற்றிப்பார்த்தனர். இந்த பூங்காவை, வெற்றி அமைப்பு பாராமரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us