/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயல்படாத சிக்னலால் 'சிக்கல்'; விபத்து அபாயம் அதிகரிப்பு செயல்படாத சிக்னலால் 'சிக்கல்'; விபத்து அபாயம் அதிகரிப்பு
செயல்படாத சிக்னலால் 'சிக்கல்'; விபத்து அபாயம் அதிகரிப்பு
செயல்படாத சிக்னலால் 'சிக்கல்'; விபத்து அபாயம் அதிகரிப்பு
செயல்படாத சிக்னலால் 'சிக்கல்'; விபத்து அபாயம் அதிகரிப்பு
ADDED : மார் 25, 2025 11:49 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அம்மாபாளையம் பஸ் ஸ்டாப்பில் காலை, மாலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், அலுவலகம் மற்றும் கல்லுாரிக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் திருப்பூர் மற்றும் கோவை நோக்கி செல்கின்றனர்.
இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பகுதியாக உள்ள அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிக்னல் பல மாதங்களாக சரிவர இயங்காமல் உள்ளதால் சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் முறையாக நின்று செல்வதில்லை. இதனால் எதிரெதிரில் வரும் வாகனங்களும், ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து வரும் வாகனங்களும் அடிக்கடி மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் சிறிய விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகிலேயே திருமுருகன்பூண்டி புறக்காவல் நிலையம் மற்றும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், போலீசார் சரிவர பணியில் இருப்பதில்லை. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளையில் மாணவர்களும், பெற்றோரும் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக தானியங்கி போக்குவரத்து சிக்னலை பராமரித்து, பள்ளி முன் வேகத்தடை அமைத்து, 'பீக் ஹவர்ஸில்' போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.