/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்
விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்
விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்
விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 10:54 PM

உடுமலை,; உடுமலை நேதாஜி மைதானம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், மழைநீர் தேங்கி விளையாடுவதற்கு வழியில்லாமல் உள்ளது.
உடுமலை கல்பனா ரோட்டில், நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குட்பட்டதாக இந்த மைதானம் உள்ளது. மைதானத்தில் நாள்தோறும் காலை, மாலையில் முதியவர்கள் நடைபயிற்சிக்கு வருகின்றனர்.
உடற்பயிற்சி செய்வதற்கான தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஹாக்கி, கூடைபந்து, கிரிக்கெட் ஆடுகளங்கள் உள்ளன. தற்போது விடுமுறையாக இருப்பதால், நாள்தோறும் பள்ளி மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர்.
இவ்வாறு பலரும் பயன்படுத்தும் மைதானம், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் மழை பெய்யும் நாட்களில், மழைநீர் தேங்கி மைதானம் சேறும் சகதியாக மாறுகிறது. விடுமுறையை மையமாகக்கொண்டு, பல தனியார் விளையாட்டு அமைப்புகளின் சார்பில் போட்டிகளும் நடத்தப்பட்டன.
ஆனால் மைதானத்தை பராமரிப்பதற்கு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும், ஸ்பான்சர் செய்வதற்கு கொண்டு வரப்படும் தனியார் கடைகளின் போர்டுகளையும், மைதானத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.
அதேபோல் நடைபயிற்சி செய்வதற்கு, தன்னார்வலர்கள் வாயிலாக நடக்கும் பகுதிகள் சமன்படுத்தப்படுகிறது. இதனால் விளையாடும் பகுதி பள்ளமாகி விடுகிறது. குழந்தைகள் விளையாடும் பகுதிகளுக்கு அருகே, செடிகள் புதராக வளர்ந்துள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் மைதானத்தை பயனுள்ள வகையில், மேம்படுத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கீழ் கொண்டுவர வேண்டுமென, விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.