/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்': தி.மு.க., பேரூராட்சி தலைவர் 'ஓபன் டாக்' 'ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்': தி.மு.க., பேரூராட்சி தலைவர் 'ஓபன் டாக்'
'ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்': தி.மு.க., பேரூராட்சி தலைவர் 'ஓபன் டாக்'
'ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்': தி.மு.க., பேரூராட்சி தலைவர் 'ஓபன் டாக்'
'ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்': தி.மு.க., பேரூராட்சி தலைவர் 'ஓபன் டாக்'
ADDED : மார் 26, 2025 06:21 AM

பல்லடம் : 'ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவரானேன்,' என, தி.மு.க.,வை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பேசிய ஆடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுாகா, பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிசாமி. தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். பின், தி.மு.க.,வில் இணைந்தார். இவருக்கும், தி.மு.க., வார்டு உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் உள்ளது.
இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த, 13வது வார்டு உறுப்பினர் பெரியசாமியுடன் விநாயகா பழனிசாமி பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், ''ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வந்தேன்,'' என கூறுகிறார். கூடவே, ''அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதனுடன் நெருக்கமாக இருப்பதால், யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார்.
இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''நான் பெரியசாமி வீட்டுக்கு நேரில் சென்று பேசினேன். அதை யாரோ பதிவு செய்து, வெட்டி ஒட்டி வெளியிட்டுள்ளனர். தகவல் வெளியிட்டவர் மீது வழக்கு தொடர உள்ளேன்,'' என்றார்.