Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர் இறங்கக்கூடாது'

'கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர் இறங்கக்கூடாது'

'கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர் இறங்கக்கூடாது'

'கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர் இறங்கக்கூடாது'

ADDED : மே 26, 2025 06:34 AM


Google News
திருப்பூர்: கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது; மீறி னால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:


மனித கழிவு அகற்றும் தொழில் செய்வோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013ன் படியும், கோர்ட் உத்தரவுப்படியும், கழிவுநீர் தொட்டியினுள் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

மீறுவோருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுவோருக்கு, 5 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால், அப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர், ஒப்பந்ததாரர், வளாக உரிமையாளர், பணி அமர்த்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த பணியாளரின் வாரிசு தாரருக்கு, பணி அமர்த்தியவர் 30 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும்.

பணியாளருக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட்டால், அதன் தீவிரத்தை பொறுத்து, 10 லட்சம் ரூபாய்க்கும் குறையாமல் இழப்பீடு வழங்கவேண்டும். நிரந்தரமான இயலாமை ஏற்பட்டால், 20 லட்சம் ரூபாய்க்கும் குறையாமல் இழப்பீடு வழங்கவேண்டும்.

14420 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு, கழிவுநீர் அகற்றும் சேவையை பெறலாம். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும், சுத்திகரிப்பு மையங்கள், கழிவுநீர் தொட்டிகளை, இயந்திரம் மூலம் கழிவுநீர் அகற்றும்போது, தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்கவேண்டும்; தொழிற்சாலை நிர்வாகம் இதை உறுதிப்படுத்தவேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us