ADDED : பிப் 23, 2024 08:31 PM
மாணவர்கள் முதலில் அதிக மதிப்பெண் வினாக்களை எழுதினால் நன்று. ஏனெனில், முதலிலேயே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஆர்வம் மற்றும் உற்சாகம் மிகுதியால், தேவைப்படும் அளவைவிட, அதிகமாக எழுதிக்கொண்டே செல்வோம்.
இதனால், பயனில்லை என்பதோடு, மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த நேரமானது, தேவையின்றி வீணாகிறது. இதனால், நிறைய எழுத வேண்டிய அதிக மதிப்பெண் வினாக்களுக்கு, தேவையான அளவு எழுத முடியாமல் திணறி, மதிப்பெண்களையும் இழக்க நேரிடுகிறது.
பதில் எழுதும்போது, கேள்விக்கான பிரிவை குறிப்பிடுவதற்கும், கேள்வி எண்ணைக் குறிப்பிடுவதற்கும், எந்த வகையிலும் மறத்தல்கூடாது. அப்படி மறந்தால், கோட்டைவிடப்போவது நீங்கள்தான்.
தேர்வு எழுதும் முன்பாகவே, இந்த கேள்விப் பிரிவை, இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிடவும்.
கடைசி மணியடிக்கும் வரை, எழுதுவது நல்லதல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, கேள்வி எண்கள் மற்றும் பிரிவுகள், சரியானபடி குறிப்பிடப்பட்டுள்ளதா, பதில்களின் இடையில், சரியான முறையில் கோடுகள் போடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கவும்.