ADDED : செப் 11, 2025 06:50 AM
திருப்பூர்; போக்குவரத்து சரி செய்தல், திருவிழா மற்றும் பண்டிகை காலங்கள், அரசியல் கூட்டம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
காலியாக உள்ள, 31 பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், ஊர்க்காவல் படைக்கான தேர்வு நேற்று காலை நடந்தது. தேர்வு குழுவில் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி மனோகரன், துணை மண்டல தளபதி நித்யா, அட்மின் அதிகாரி பாபு ஆகியோர் நேர்காணல் நடத்தினர். அதில், 31 பணியிடங்களுக்கு, 61 பேர் பங்கேற்றனர்.