/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹீமோபிலியா சொசைட்டி மாவட்டத்தில் துவக்கம் ஹீமோபிலியா சொசைட்டி மாவட்டத்தில் துவக்கம்
ஹீமோபிலியா சொசைட்டி மாவட்டத்தில் துவக்கம்
ஹீமோபிலியா சொசைட்டி மாவட்டத்தில் துவக்கம்
ஹீமோபிலியா சொசைட்டி மாவட்டத்தில் துவக்கம்
ADDED : ஜூன் 15, 2025 11:29 PM

திருப்பூர்; திடீர் விபத்து அல்லது அடிபடும் போது உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறையாமல் அப்படியே தொடர்ந்தால், 'ஹீமோபிலியா' என அழைக்கப்படுகிறது. மாவட்டத்தில், 70க்கும் அதிகமானோர் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்ட ஹீமோபிலியா சங்கத்தின் ஒரு பகுதியாக, திருப்பூரை சேர்ந்தவர்களும் இணைந்திருந்த நிலையில், நேற்று, திருப்பூர் மாவட்டத்துக்கென தனி 'ஹீமோபிலியா' சொசைட்டி துவக்கியுள்ளனர். பி.என்., ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில், 50க்கும் அதிகமான ஹீமோபிலியா பாதித்தவர்கள் பங்கேற்றனர்.
தலைவராக பொம்மண்ணன், துணைத்தலைவராக சாமிநாதன், பொருளாளராக ஜெகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 'மாவட்டத்தில் உள்ள ஹீமோபிலியா நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை கிடைக்கச் செய்வது, இந்த பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.