/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணிஉடுமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
உடுமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
உடுமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
உடுமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 31, 2024 12:03 AM

உடுமலை;தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, உடுமலையில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த ஊர்வலத்தை, குட்டைத்திடலில், சார்பு நீதிபதி மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் துவக்கி வைத்தனர்.
பொதுமக்கள், இருசக்கர வாகன விற்பனையாளர்கள், இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள், ஹெல்மெட் அணிந்து, முக்கிய ரோடுகளில், ஊர்வலமாகச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.