/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி
வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி
வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி
வெயிலை சமாளிக்க போலீசாருக்கு தொப்பி
ADDED : மார் 22, 2025 11:06 PM

பல்லடம்: கோடை வெயிலை சமாளிக்க, போக்கு வரத்து போலீசாருக்கு தொப்பி வழங்கப்பட்டது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் வெயிலில் பயணிப்பதே பெரும் சவாலான காரியமாக உள்ள நிலையில், வாகன நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார், அன்றாடம் வெயிலால் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதனால், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், போக்குவரத்து போலீசாருக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக தொப்பி பல்லடத்தில் வழங்கப்பட்டது. முன்னதாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, போலீசாருக்கு குளிர்பானம் வழங்கி, தொப்பிகளை அணிவித்தார். வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதுடன், பாதுகாப்பாக பணியாற்றுமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.