/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரும் 12ம் தேதி குறைகேட்பு கூட்டுறவு பணியாளர் பங்கேற்பு வரும் 12ம் தேதி குறைகேட்பு கூட்டுறவு பணியாளர் பங்கேற்பு
வரும் 12ம் தேதி குறைகேட்பு கூட்டுறவு பணியாளர் பங்கேற்பு
வரும் 12ம் தேதி குறைகேட்பு கூட்டுறவு பணியாளர் பங்கேற்பு
வரும் 12ம் தேதி குறைகேட்பு கூட்டுறவு பணியாளர் பங்கேற்பு
ADDED : செப் 09, 2025 11:17 PM
திருப்பூர்; கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலன் கருதி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மண்டலத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், நான்காவது தளம், அறை எண்: 407ல் உள்ள, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்றவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோர், தங்கள் குறைகளை, குறைகேட்பு கூட்டத்தில் மனுவாக அளிக்கலாம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனுக்கள் பரிசீலனை செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.