Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பசுமை சார் உற்பத்தி ஆடைகளே எதிர்காலம்!

பசுமை சார் உற்பத்தி ஆடைகளே எதிர்காலம்!

பசுமை சார் உற்பத்தி ஆடைகளே எதிர்காலம்!

பசுமை சார் உற்பத்தி ஆடைகளே எதிர்காலம்!

ADDED : பிப் 25, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
இயற்கைக்கு இன்னல் செய்யாத, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டுமென, திருப்பூர் பின்னலாடைத்துறையினர் ஓங்கி ஒலிக்கின்றனர். மறுசுழற்சி தொழில்நுட்பம், தொழிலில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என ஊக்குவிக்கின்றனர்.

'நிப்ட் - டீ' கல்லுாரி ஆயத்த ஆடை வடிவமைப்பு மற்றும் மெர்ச்சன்டைசிங் பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர், 'நிலையான ஆடை' என்ற கருப்பொருளில் ஆடைகளைவடிவமைத்து அசத்தினர்.

நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்ப அடிப்படையில், ஆடைகளை உருவாக்கிய மாணவ, மாணவியர், அந்த ஆடைகளை அணிந்து 'கேட் வாக்' வந்தனர்.

சுற்றுச்சூழலுக்கான எதிர்மறை தாக்கங்களை குறைப்பது, நீடித்த வடிவமைப்புகள் மற்றும் சுற்றுகள்மூலம், ஆடைக்கழிவுகளை குறைப்பது ஆகிய நோக்கங்களுடன் புதிய யுத்தியை பயன்படுத்தி ஆடைகளை வடிவமைத்திருந்தனர்.

தயாரித்த ஆடையின் தனித்துவம் குறித்து, வடிவமைத்த மாணவ, மாணவியர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

ஸ்ரீசுபாஷினி: பழைய நெய்த துணிகள் மற்றும் லுங்கியின் கலவையுடன், புதிய ஆடையை வடிவமைத்துள்ளோம். ஒரு சட்டை, நெய் துணி, காலர் மற்றும் கை சுற்றுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டையின் ஒரு பக்கத்துக்கு லுங்கியும், மறுபுறம் நெய்த துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூர்யா பிரகாஷ் (மாடல்: லாவண்யா): 'டெனிம்' மற்றும் லுங்கி துணியால் செய்யப்பட்ட ஒரு நீண்ட 'ப்ராக்' தயாரித்துள்ளோம். ஆடையின் உடலுக்கு டெனிம் துணியும், ஆடையின் அடிப்பகுதிக்கு லுங்கி துணியும் பயன்படுத்தி, புதிய மாடலில், 'ப்ராக்' தயாரித்தோம்.

ஸ்வஸ்திகா: 'க்ராப் டாப்' , 'ப்ரில்' அட்டாச்சென்ட் மற்றும் வட்ட வடிவ பாவாடை, திரை துணி ஆகியவற்றை பயன்படுத்தி, புதுவகை ஆடை வடிவமைத்துள்ளேன். இவ்வகை துணியை பயன்படுத்துவதன் மூலமாக, புதுவகை ஆடை டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஷியாம் கணேஷ்: இரண்டு டெனிம் பேண்ட்களை இணை த்து, ஜாக்கெட் மேலா டை தயாரித்துள்ளேன். ஜாக்கெட் முன் பக்கத்தில், பேன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட பாக்கெட், இடுப்பு பெல்ட் போன்ற தோற்றத்துக்காக, ஆடையின் அடிப்பகுதியில் இணைத்துள்ளேன். கருப்பு நிற ஜிப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'மெஸ்'ஸியான தோற்றத்தை உருவாக்க, இரண்டு கை பகுதிகளிலும், தையல் இல்லாமல் ஆடையை உருவாக்கினேன்.

ஸ்ரீசாய்(மாடல்: விஷால்): டெனிம் துணிகளை கொண்டு, அழகிய வட்ட வடிவிலான 'டி-சர்ட்' தயாரித்துள்ளேன். பழைய டெனிம் ஜாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட நீல மற்றும் கருப்பு டெனிம் துணிகளை மீண்டும் பயன்படுத்தி, இந்த 'டி-சர்ட்' வடிவமைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us