ADDED : ஜன 25, 2024 06:13 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தின கிராமசபை கூட்டம், நாளை நடைபெறுகிறது.
நாளை காலை, 11:00 மணிக்கு, அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் கிராமசபை நடைபெறும். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை, துாய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபையை சிறப்பாக நடத்துவதற்காக, ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், கிராமசபையில் பங்கேற்று, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.