/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழாஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஜெய்ஸ்ரீராம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 28, 2024 12:14 AM
பொங்கலுார்;அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் பத்தாவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் திருமலை வரவேற்றார். இறுதி ஆண்டு முடித்த, 175 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன கட்டுமானம் மற்றும் எரிசக்தி உபகரணங்கள் துறை தலைவர் சுரேஷ் சேஷாத்திரி, சென்னை டெக் மகேந்திரா நிறுவனத் துணை தலைவர் நெல்சன் குழந்தை ராஜ், கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை தலைவர் ரஞ்சித் நிமல், கல்லுாரி நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.