/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திறன் வளரும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திறன் வளரும்
அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திறன் வளரும்
அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திறன் வளரும்
அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திறன் வளரும்
ADDED : ஜூன் 20, 2025 02:24 AM
திருப்பூர் : அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின், ஆங்கில திறனை வளர்க்கும் 'லெவல் அப்' திட்டம் பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. திட்ட செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழியறிவு திறனை மேம்படுத்த 'லெவல் ஆப்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மொழித்திறன்களை வளர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில் வெற்றிகரமாக பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களை கண்டறிந்து, சில ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் நுட்பங்களை, பிற ஆசிரியர்கள் அறியும் வகையில், அவற்றை மொழிவள வங்கியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'லெவல்அப்' திட்டம் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படையை எளிதாக கற்றுக்கொள்ள வகை செய்வதாகும்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் அடங்கிய குறைந்த பட்ச மொழித்திறன் அறியும் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள உதவும் வகையில் இத்திட்டச் செயல்பாடு குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.