/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்
அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்
அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்
அரசு பணி இனி எட்டும் கனி தேவை விடா முயற்சியும், தொடர் பயிற்சியும்
ADDED : ஜூன் 20, 2025 11:58 PM

திருப்பூர் : எப்படியாவது 'குரூப்' தேர்வு எழுதி அரசு பணிக்கு சென்று விட வேண்டும் என்பது மாணவர்களின் லட்சிய கனவாக இருக்கிறது; ஆனாலும் அது சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது. தொடர் பயிற்சி, விடாமுயற்சி, சுய பரிசோதனை மூலம் பொது அறிவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அரசு பணி, எட்டும் கனி என்பதை திருப்பூர் மாவட்ட போட்டித் தேர்வர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி மையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. உடுமலை மற்றும் குடிமங்கலத்திலும் புதிய பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகள், வேளாண் அலுவலருக்கான தேர்வு, எஸ்.ஐ., - கான்ஸ்டபிள் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்களின் திறனை பரிசோதிப்பதற்காக, தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
கடந்த 2021 ஏப்ரல் முதல் நடப்பாண்டு மே மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 51 பேர் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு அலுவலராக பணியாற்றிவருகின்றனர்.
காங்கேயத்தில் புதிய பயிற்சி மையம் உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரூப் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் அனைவரும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி மையத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தேர்வை திறம்பட எதிர்கொண்டு, வெற்றி இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.