ADDED : ஜூன் 17, 2025 12:13 AM

திருப்பூர்; தமிழக அரசு ஊழியர்களுக்கான காப்பீடு பொதுத்துறை நிறுவனத்துக்குள் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது; சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் முழு தொகையை மருத்துவமனைகள் பெற்றுக் கொள்கின்றன.
இன்சூரன்ஸ் தொகை திரும்ப வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மட்டுமின்றி அனைத்து வகையான சிகிச்சைகளும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் (பொறுப்பு) பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணை தலைவர் அந்தோணி ஜெயராஜ், செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் அம்சராஜ், ராணி பாலகிருஷ்ணன், முருகசாமி உள்ளிட்டோர் பேசினர்.
கோரிக்கை அடங்கிய மனு கலெக்டர், கருவூல அலுவலர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.