ADDED : ஜூன் 04, 2025 02:08 AM
திருப்பூர்; திருப்பூர், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54. மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த, 2017, டிச., 17 அன்று, கோவில்பாளையம், டெர்ப்ஸ் கல்லுாரி அருகில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது.
ஆறுமுகத்துக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் தப்பிய அவர், இழப்பீடு கேட்டு, தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்கு, 3.18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததால், நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவுப்படி, நேற்று, திருப்பூர் - நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.