ADDED : ஜன 08, 2024 01:19 AM
உடுமலை;கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த கோ - கோ போட்டியில், கோவை எம்.டி.என்., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
கோவை சகோதயா இன்டர் பள்ளியின் சார்பில், கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், பள்ளிகளுக்கு இடையிலான கோ - கோ போட்டி நடத்தியது. போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.
பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் 12, 14 மற்றும் 16, 19 வயதுக்குட்பட்ட நான்கு பிரிவுகளிலும் கோவை எம்.டி.என்., பியூச்சர் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.
12 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில், ஸ்ரீ விவேகானந்தா பப்ளிக் பள்ளி, 14 வயதினருக்கான பிரிவில் சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி, 16, 19 வயதினருக்கான பிரிவில் அமிர்தா வித்யாலயா பள்ளிகளும் இரண்டாம் இடம் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, பள்ளி இயக்குனர் பானுமதி, முதல்வர் சரளாதேவி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இப்பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.