/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி
உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி
உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி
உண்டியல் சேமிப்பு பணத்தை ராணுவத்துக்கு வழங்கிய சிறுமி
ADDED : மே 11, 2025 03:11 AM

திருப்பூர்:திருப்பூரில், ஆறு வயது சிறுமி, தன் உண்டியல் சேமிப்பு பணத்தை இந்திய ராணுவத்து வழங்கினார்.
திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்-அஞ்சிலி தம்பதியின் மகள் தாருணிகா,6. தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டாக, பெற்றோர், வீட்டுக்கு வரும் உறவினர்கள் தரக்கூடிய சிறிய தொகையை, உண்டியலில் சேர்த்து வந்தார்.
இச்சூழலில், இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டதையடுத்து, இந்தியர ராணுவத்துக்கு உதவும் வகையில், உண்டியலுடன் தாருணிகா தன் தாயுடன், வடக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று, மாவட்ட தலைவர் சீனிவாசனிடம் நேற்று ஒப்படைத்தார். உண்டியல் பணத்தை எண்ணிப்பார்த்த போது, 2390 ரூபாய் இருந்தது. இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட தலைவர், உடனடியாக நேஷனல் டிபன்ட்ஸ் பண்ட்டுக்கு ஆன்லைன் வாயிலாக, அப்பணத்தை செலுத்தி ரசீது பெற்று, குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். தாய் நாட்டை காக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன், ராணுவத்துக்கு தன் சேமிப்பை வழங்கிய, ஆறு வயது சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.