ADDED : பிப் 12, 2024 01:01 AM
பொங்கலுார் சேமலை கவுண்டம்பாளையம்அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரெப்கோ வங்கி மேலாளர் யுவராஜ், டேலி அகாடமி நிறுவனர் சிவகார்த்திகேயன் ஆகியோர் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் பொங்கலுார் வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி, ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நாட்ராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.