/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காந்தி நினைவு நாள் அனுசரிப்பு: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
காந்தி நினைவு நாள் அனுசரிப்பு: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
காந்தி நினைவு நாள் அனுசரிப்பு: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
காந்தி நினைவு நாள் அனுசரிப்பு: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜன 31, 2024 12:00 AM
- நிருபர் குழு-
உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தலைவர்கள் அரும்பாடுபட்டனர். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள், தீண்டாமை ஒழிப்பு தினமாக பின்பற்றப்படுகிறது.
இந்நாள் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை சுற்றுப்பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
உடுமலை அருகே, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் சாவித்திரி தீண்டாமை ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில், காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வு, கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி தலைமை வகித்தார். நகர காங்., தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை தெற்கு மாவட்ட காங்., மனித உரிமை துறை சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில், மாநில பேச்சாளர் அன்சார், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.