/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்
தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்

புதுப்புது வழிகளில் ஏமாற்றும் யுத்தி
திருப்பூர் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி கூறியதாவது:
ரூ.3 லட்சம் கடன் பெற ரூ.3.15 லட்சம் பறிபோனது
கடன் தருவதாக கூறி செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, மொபைல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடிவிடுவர். போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து, நண்பர்களுக்கு பகிர்வதாக கூறி, பணம் கேட்டு மிரட்டுவர். பெண் ஒருவர் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 3.15 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். கடன் கேட்கும் நம்மிடமிருந்து ஏன், கடன் கொடுப்பவர் தொகை கேட்கிறார் என்கிற சிந்தனை கூட பலருக்கு இல்லை.
சிறிய தொகைக்கு மயங்கினால் பெரிய தொகை காலியாகும்
வங்கிகளுக்கு செல்ல தயங்கி, ஆன்லைனிலேயே கே.ஒய்.சி., அப்டேட் செய்கிறோம். இவர்களில் பலர், ஹேக்கர்களின் வலையில் தங்களை சிக்கவைத்துக்கொள்கின்றனர். பகுதி நேர வேலை என கூறி, 100 ரூபாயில் துவங்கி மூவாயிரம் ரூபாய் வரை படிப்படியாக சிறிய தொகைகளை செலுத்தக்கோருவர்; ஒவ்வொரு நிலையிலும் நாம் செலுத்துவதைவிட, கூடுதல் தொகை வழங்கி, நம்பிக்கையை ஏற்படுத்துவர். இறுதியில், லட்சக்கணக்கான ரூபாயை செலுத்தக்கோரி, சுருட்டிவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். சமூக வலைதளங்களிலிருந்து போட்டோ மற்றும் விவரங்களை பெற்று, போலி கணக்கு உருவாக்கி, நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்பதும் பரவலாகிவருகிறது.