/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பூங்காற்று புத்துணர்வு... இலை அசைவு இன்னிசை! இலையசைவே இன்னிசை ! அறிவியல் பூங்கா தரும் இனிய அனுபவம்பூங்காற்று புத்துணர்வு... இலை அசைவு இன்னிசை! இலையசைவே இன்னிசை ! அறிவியல் பூங்கா தரும் இனிய அனுபவம்
பூங்காற்று புத்துணர்வு... இலை அசைவு இன்னிசை! இலையசைவே இன்னிசை ! அறிவியல் பூங்கா தரும் இனிய அனுபவம்
பூங்காற்று புத்துணர்வு... இலை அசைவு இன்னிசை! இலையசைவே இன்னிசை ! அறிவியல் பூங்கா தரும் இனிய அனுபவம்
பூங்காற்று புத்துணர்வு... இலை அசைவு இன்னிசை! இலையசைவே இன்னிசை ! அறிவியல் பூங்கா தரும் இனிய அனுபவம்
ADDED : பிப் 10, 2024 11:03 PM

திருப்பூர்:குட்டீஸூக்கு மட்டுமல்ல; தினமும் பரபரப்பாக ஓடி அலுத்துப் போனவர்களுக்கும், வீட்டில் அடைந்து சலித்துப் போனவர் களுக்கும் மாநகராட்சி அறிவியல் பூங்காவைச் சுற்றிப்பார்ப்பது இனிமையான அனுபவமாக திகழ்கிறது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சி அறிவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதி சிறப்பான பொழுதுபோக்கு தலமாக மாறியுள்ளது. மாணவ, மாணவியருக்கு மட்டுமின்றி, வனத்துறை அலுவலர்களுக்கான சிறப்பான பயிற்சி களமாகவும் அறிவியல் பூங்கா உயர்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 'சோலார் பார்க்' இயங்கி வரும் நிலையில், அதன் அருகிலேயே, 4.06 கோடி ரூபாயில், அறிவியல் பூங்கா உருவாகியுள்ளது. மொத்தம் உள்ள, 12 ஏக்கர் நிலத்தில், இந்தியா முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட, 50 வகை ரகங்களில், ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் வளர்ந்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்பட்ட, அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு மரங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு பூங்கா, 200 பேர் அமரும் வகையிலான பயிலரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் சிறு கலைக்கூடம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நடை பயிற்சிக்கான பாதை, கடைகள், கழிப்பிட வசதி என, சகல வசதிகளுடன் அமைந்துள்ளது.
மாநகராட்சியின் அறிவியல் பூங்காவை, 'வெற்றி' அமைப்பு பராமரிக்க உள்ளது. அதற்காக, பெரியவர்களுக்கு, 10 ரூபாயும், சிறுவர்களுக்கு, ஐந்து ரூபாயும் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதம், 250 ரூபாய் கட்டணத்தில், நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்யவும் அனுமதி உண்டு. தொழில்முறையாக, போட்டோ எடுக்க, 500 மற்றும் வீடியோ எடுக்க, ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்கவர் அறிவியல் பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியர்கள் பூங்காவை சுற்றிப்பார்க்கவும், குதுாகலமாக துள்ளி விளையாடவும் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை. நடுத்தர வயது பெண்களும், முதியோர்களும் கூட, பச்சை கூடாரங்களில் புகுந்து, 'ஹாயாக' பூங்காவில் நடைபயிற்சி செய்து வரலாம் என்றே விரும்புகின்றனர். விடுமுறை நாட்களிலும், இதர நாட்களிலும் மாலை, 4:00 மணி முதல், பூங்காவுக்கு மக்கள் வருவது அதிகரித்துள்ளது.
மாநகராட்சி அறிவியல் பூங்கா, பயிலரங்குடன் இருப்பது பயனளிக்கிறது. மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாகவும், இங்கு வரலாம்.