ADDED : ஜூன் 02, 2025 06:24 AM

திருப்பூர் உதவிடுவோம் உயிருள்ளவரை அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், கே.வி.ஆர்., நகர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் துவக்கி வைத்தனர்; மொத்தம், 100 பேர் பங்கேற்றனர். தி ஐ பவுண்டேஷன்மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.