/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
உயிர் காக்கும் உன்னத பணியில் முதல் நிலை காப்பாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : செப் 14, 2025 02:09 AM

திருப்பூர்:'பேரிடர் சமயத்தில் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள், உயிர்களை காக்கும் முதல் நிலை காப்பாளர்களாக செயல்பட வேண்டும்' என, தீயணைப்பு துறை அலுவலர் பேசினார்.
ஆண்டுதோறும், செப்., இரண்டாவது சனிக்கிழமை, உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், குமார்நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மாணவ, மாணவியருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். புயல், வெள்ளம், தீ உள்ளிட்ட பேரிடர் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் விதம் குறித்தும் விளக்கினர். உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கும் முறை குறித்தும், தீயணைப்பு வீரர்கள் பயிற்சி வழங்கினர். மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கற்று கொண்டனர்.
உதவி தீயணைப்பு அலுவலர் பேசுகையில், 'மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்பதில், அங்குள்ள மக்கள், இளைஞர்கள் தான் முதல் நிலை காப்பாளர்களாக இருந்து, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும். இடைபட்ட நேரத்துக்குள் வந்து சேரும் தீயணைப்பு வீரர்கள், மீட்புப்பணியை மேற்கொள்வர். பொதுமக்களே, காப்பாளர்களாக மாறுவதன் வாயிலாக உயிர், உடமை சேதமாவதை பெருமளவில் தவிர்க்க முடியும். குறிப்பாக, கல்லுாரி மாணவ, மாணவியர், பேரிடர் மீட்பு பயிற்சியை பெற்றுக் கொள்வது, அவரவர் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பில் சிக்குவோரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும்,' என்றார்.