/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசி நகராட்சியின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம் அவிநாசி நகராட்சியின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம்
அவிநாசி நகராட்சியின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம்
அவிநாசி நகராட்சியின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம்
அவிநாசி நகராட்சியின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம்
ADDED : மே 16, 2025 12:11 AM
அவிநாசி, ; அவிநாசியை நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சியாக இருந்த அவிநாசி, நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பின், முதல் கூட்டம் நகராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில், துணைத் தலைவர் மோகன், ஆணையாளர் பாரதி (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி முன்னிலையில் நடைபெற்றது.
துவக்க உரையாக தலைவர் தனலட்சுமி பேசுகையில், ''அவிநாசி பெரிய கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்ற, 14 நாட்களும் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் துாய்மை பணிகளை திறம்பட மேற்கொண்டு, 50 டன் கழிவுகளை உடனுக்குடன் அகற்றிய சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் துாய்மை பணியாளர்களின் பணி பாராட்டுக்குரியது,'' என்றார்.
நகராட்சி ஆணையாளர் பாரதி (பொறுப்பு) பேசுகையில், ''அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டுமானால் முதலில் மக்களிடமிருந்து வரியை வசூல் செய்து, அரசுக்கு உரிய தேதிக்குள் தவறாது செலுத்த வேண்டும். அதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது நிதியிலிருந்து திட்டங்களை ஒதுக்க வரி மிக முக்கியம். எனவே விரைவில் நிலுவையில் உள்ள அனைத்து வரி இனங்களையும் வசூல் செய்ய வேண்டும்,'' என்றார்.
சித்ரா (அ.தி.மு.க.,) பேசுகையில், 'நகராட்சிக்குட்பட்ட மேற்கு ரத வீதியை நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைத்து விரைவில் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
அவர் பேசியதை தொடர்ந்து, அலுவலக பயன்பாட்டுக்காக, நகராட்சி பொது நிதியிலிருந்து ஆணையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் பயன்படுத்த 9 லட்சத்து 83 ஆயிரத்து 670 ரூபாய் மதிப்பில் இரண்டு வாகனங்களும் மற்றும் 18 லட்சத்து 74 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பில் தலைவர் பயன்படுத்த ஒரு வாகனம் என மூன்று வாகனங்கள் வாங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.